இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
x
தினத்தந்தி 5 March 2025 9:22 AM IST (Updated: 5 March 2025 8:36 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 5 March 2025 9:24 AM IST

    அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

  • 5 March 2025 9:24 AM IST

    அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க விட மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

  • 5 March 2025 9:24 AM IST

    கிறிஸ்தவர்களின் தவக் காலமான சாம்பல் புதன் இன்று தொடங்கிய நிலையில், தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயத்தில் அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

  • 5 March 2025 9:23 AM IST

    பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது. தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை அறிவியுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • 5 March 2025 9:23 AM IST

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளன.

1 More update

Next Story