இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jan 2026 9:08 AM IST
அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை; தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை நகரம் குறித்த அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை என ராஜ்தாக்கரேக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து உள்ளார்.
- 13 Jan 2026 9:06 AM IST
நாளை மகரஜோதி: சபரிமலையில் குவிந்த பக்தர்கள் - பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள்
மகரவிளக்கு பூஜை நாளில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
- 13 Jan 2026 9:06 AM IST
நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக இருப்பவர் வைகோ: நடிகர் சத்யராஜ்
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் பொதுக்கூட்டத்துடன், சமத்துவ நடைபயண நிறைவு விழா நடந்தது. விழாவில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்தார். இதில் துரை வைகோ எம்.பி. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பூமிநாதன் எம்.எல்.ஏ.. தளபதி எம்.எல்.ஏ., நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 13 Jan 2026 9:04 AM IST
டெல்லியில் விஜய் நடத்திய ஆலோசனை: தேர்தல் கூட்டணி அமைகிறதா..?
சி.பி.ஐ. விசாரணை முடிந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக சென்னை திரும்பவில்லை. அவர் சொகுசு ஓட்டலில் தங்கினார். அங்கு அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது குறித்த சட்ட ஆலோசனைகளை சட்ட நிபுணர்களிடம் பெற்றதாக தெரிகிறது.
- 13 Jan 2026 9:03 AM IST
காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக கரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமசிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- 13 Jan 2026 9:02 AM IST
சிபிஐ விசாரணை நிறைவு: இன்று சென்னை திரும்புகிறார் விஜய்?
தவெக தலைவர் விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சென்னை திரும்புவார் என தவெகவினர் தரப்பில் கூறப்படுகிறது.
- 13 Jan 2026 9:01 AM IST
இன்றைய ராசிபலன் (13.01.2026): கடன் பிரச்சினை தீரும் ...!
ரிஷபம்
பணப் புழக்கம் திருப்தி தரும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். பிள்ளைகளின் உடல் நலம் தேறும். மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர். வியாபாரத்தில் விற்பனை கூடும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்தில் மதிப்பு கூடும். ஜாதகம் செட்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்













