இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025


தினத்தந்தி 14 July 2025 9:11 AM IST (Updated: 15 July 2025 9:19 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • கணவரை பிரிந்தார் சாய்னா நேவால்
    14 July 2025 9:15 AM IST

    கணவரை பிரிந்தார் சாய்னா நேவால்

    பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பை விட்டுப் பிரிவதாக அறிவிப்பு. 7 ஆண்டுகள் |திருமண பந்தம் முடிவுக்கு வந்தது. நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி, வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்புக் கொடுத்ததற்கு நன்றி என சாய்னா பதிவிட்டுள்ளார்.

  • சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
    14 July 2025 9:15 AM IST

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

    அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உதயகுமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

  • 14 July 2025 9:14 AM IST

    2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story