இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
x
தினத்தந்தி 16 July 2025 9:24 AM IST (Updated: 16 July 2025 8:02 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 16 July 2025 10:08 AM IST

    மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

    தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.124-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • 16 July 2025 9:32 AM IST

    அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளா திரும்பினார்


    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உயர் சிகிச்சைக்காக கடந்த 5-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள மினாசோட்டோ மயோ கிளினிக்கில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 நாட்கள் நடந்த சிகிச்சைக்கு பின் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது மனைவியுடன் அதிகாலை 3.30 மணிக்கு கேரளா திரும்பினார்.


  • 16 July 2025 9:30 AM IST

    இன்றைய ராசிபலன் - 16.07.2025

    ரிசபம்

    உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். விரைவில் தங்கள் படம் வெளியாகும்.

    அதிர்ஷ்ட நிறம் - ஊதா

  • 16 July 2025 9:25 AM IST

    த.வெ.க. 2-வது மாநில மாநாட்டுக்கு மதுரையில் பூமிபூஜை


    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன. அதைபோல தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.


1 More update

Next Story