இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
Live Updates
- 15 Dec 2024 11:22 AM IST
சென்னை மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு நேற்று முதல்வர் நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று மீண்டும் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.
- 15 Dec 2024 10:43 AM IST
அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க சுமார் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- 15 Dec 2024 10:24 AM IST
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என
மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
- 15 Dec 2024 10:23 AM IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன்காரணமாக நாளை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- 15 Dec 2024 9:31 AM IST
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சபரிமலை பக்தர்கள் வந்த பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலியாகினர்.






