இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
Live Updates
- 17 Dec 2024 1:21 PM IST
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் அல்ல: டி.ஆர்.பாலு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கிறோம். அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், எப்படி மசோதாவை கொண்டு வர முடியும் ஒரு அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்வதற்கான உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக அந்த உரிமையை நாம் ஒடுக்க முடியாதுஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதலாக சுமார் 13,000 கோடி செலவாகும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் அல்ல - தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு
- 17 Dec 2024 1:20 PM IST
புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை: மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது
- 17 Dec 2024 12:56 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- 17 Dec 2024 12:52 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு மக்களவையில் பேசுகையில் கூறினார்.
- 17 Dec 2024 12:24 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
- 17 Dec 2024 11:00 AM IST
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மறு அறிவிப்பு வரும் வரையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு, புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தல்
- 17 Dec 2024 10:44 AM IST
தங்கம் விலை சற்று உயர்வு...இன்றைய நிலவரம்
தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.







