இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 Feb 2025 9:32 AM IST
அமெரிக்காவில் பென்டனைல் எனப்படும் வலி நிவாரணியான மருந்து பொருளை சட்டவிரோத வகையில் விநியோகித்ததற்காக கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு வரிகளை விதிப்பது என புதிதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்தது.
இதன்படி, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீது 25 சதவீதமும், சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு இன்றில் இருந்து நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
- 1 Feb 2025 9:23 AM IST
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






