இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Oct 2025 9:48 AM IST
மேலும் அதிகரித்த ஆபரணத் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 4 Oct 2025 9:25 AM IST
மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறந்திருக்க மாநில அரசு அனுமதி
மது கடைகள், நடன பார்கள், பப் போன்றவைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 Oct 2025 9:24 AM IST
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ரகசிய நிச்சயதார்த்தம்?
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவி வருகிறது .இருப்பினும் இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரபூர்வமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட்' படங்கள் மூலம் அவர்களுக்கு இடையே உருவான நட்பு காலப்போக்கில் காதலாக மாறியுள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
- 4 Oct 2025 9:22 AM IST
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று நிறைவு
குலசை தசரா விழாவின் நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் நடக்கிறது.
- 4 Oct 2025 9:21 AM IST
உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடுவோம்: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது.
- 4 Oct 2025 9:17 AM IST
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. பணய கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தை ஏற்று பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
- 4 Oct 2025 9:15 AM IST
கரூர் கூட்ட நெரிசல்... சிறப்பு புலனாய்வுக்குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்
கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்திற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
- 4 Oct 2025 9:14 AM IST
ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் - நடிகர் எஸ்.வி.சேகர்
கரூரில் 7 மணி நேரம் கடந்து விஜய் வந்தது மாபெரும் தவறு என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
- 4 Oct 2025 9:12 AM IST
தீபாவளியை முன்னிட்டு.. 5, 6-ந் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6-ந் தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- 4 Oct 2025 9:10 AM IST
ராசிபலன் (04-10-2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் கண் சிமிட்டும்
ரிஷபம்
தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
















