இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Dec 2025 12:40 PM IST
ஷமி எங்கே..? அவர் ஏன் விளையாடவில்லை..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
முகமது ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை? என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் லேசான காயத்துடன் சிறப்பாக பந்து வீசிய ஷமி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதன்பின் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்கை ஆற்றினார்.
- 5 Dec 2025 12:38 PM IST
ரேஸிங் சர்க்யூட்டில் ரசிகர்களை பார்த்து உற்சாகம் அடைந்த அஜித்
அஜித்குமார் பங்கேற்க உள்ள செபாங்க் சர்க்யூட் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.
- 5 Dec 2025 12:14 PM IST
இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு
இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் ரஷிய அதிபர் புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.
- 5 Dec 2025 11:49 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கக் கோரி திமுக கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம்
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
- 5 Dec 2025 11:40 AM IST
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
ஜெயலலிதா மறைந்து 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
- 5 Dec 2025 11:38 AM IST
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எங்கே போகிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 5 Dec 2025 11:37 AM IST
கார்த்திகை மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
மகா தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
- 5 Dec 2025 11:36 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: 2 நாட்களில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தநிலையில், ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையின் அடிப்படையில் 2 நாட்களில் பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
- 5 Dec 2025 11:14 AM IST
12 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 5 Dec 2025 11:12 AM IST
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
















