இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Jun 2025 1:11 PM IST
முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக விஜய் பதவி வழங்கியுள்ளார். தவெகவில் இன்று காலை அருண் ராஜ் இணைந்த நிலையில், அவருக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- 9 Jun 2025 12:36 PM IST
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்.
- இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏற்பாடு.
- தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என விளக்கம்.
- 9 Jun 2025 12:02 PM IST
- மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது வழக்கு
- நெல்லை, வீரவநல்லூர் அருகே உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழாவில் மனித தலையுடன் சாமியாட்டம்
- கோவில் கொடை விழாவில் மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
- வெள்ளாங்குழி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
- 9 Jun 2025 11:17 AM IST
விஜய் உடன் கூட்டணியா? - பிரேமலதா பதில்
- "தவெக உடன் தேமுதிக கூட்டணியா என்பதை,
- விஜய் இடம் தான் கேட்க வேண்டும் 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது
- அப்போது தான் தவறுகளை சுட்டிக்காட்ட முடியும்"
- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
- 9 Jun 2025 10:17 AM IST
திமுக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலர் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார்கள். விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் இன்று தவெகவில் இணைய உள்ளார். அவருக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story






