இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 March 2025 4:13 PM IST
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துண முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பங்கேற்கிறார்.
- 13 March 2025 3:22 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6.30 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
- 13 March 2025 3:21 PM IST
ஜூனியர் உலக செஸ் சாம்பியன் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- 13 March 2025 2:32 PM IST
விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
- 13 March 2025 1:36 PM IST
பட்ஜெட்டை முன்னிட்டு "எல்லார்க்கும் எல்லாம்" என வீடியோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ரூ என்பதை முதன்மைப்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் பதிவிட்டுள்ளார்.
- 13 March 2025 1:31 PM IST
உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் நிறைந்த அலிகார், ஷாஜஹான்பூரில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன. ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதமோதல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் மத வெறுப்பு பதிவுகள், வதந்திகள் பரவுவதை தடுக்கவும் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- 13 March 2025 1:06 PM IST
நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 March 2025 12:39 PM IST
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில்கடந்த 7 நாட்களில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறது பள்ளிக் கல்வித்துறை.
- 13 March 2025 12:18 PM IST
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாதுகாவலர் சுபாகர், பணியாளர் அமல்ராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சீமான் வீட்டில் காவல் துறை ஒட்டிய சம்மனைகிழித்ததாக சுபாகர், அமல்ராஜ் கைது செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.