இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Feb 2025 1:28 PM IST
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு விட்டு, புனித நீராடி விட்டு, பக்தர்கள் சிலர் சொந்த ஊருக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பிரோசாபாத் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் வந்து கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து கொண்டது.
இதனை பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி வெளியே தப்பி ஓடினர். எனினும், பஸ்சில் ஆழ்ந்து தூங்கிய நபர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.
- 15 Feb 2025 1:06 PM IST
மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் மர்ம நோய் பாதிப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை, பாதிப்பால் 8 பேர் பலியாகி உள்ளனர் என சுகாதார துறையின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.
- 15 Feb 2025 12:46 PM IST
மயிலாடுதுறையில் சாராய விற்பனை காரணமாக 2 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகும் செய்தி தவறானது. முன்விரோதத்தால் மது போதையில் ஏற்பட்ட தகராறுதான் காரணம் என மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.
- 15 Feb 2025 12:13 PM IST
மணிப்பூரின் 2 மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
- 15 Feb 2025 12:00 PM IST
த.வெ.க. தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்ததால், Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் பா.ஜ.க.வை எதிர்த்து பேசியுள்ளார். ஆனாலும் பாரபட்சம் பார்க்காமல் மக்களுக்காக செயலாற்றுவதுதான் பாஜக என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
- 15 Feb 2025 11:38 AM IST
'பிரீஸ்டைல்' செஸ் தொடர்
'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் 8வது இடம் பிடித்தார்.
- 15 Feb 2025 11:14 AM IST
முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.
- 15 Feb 2025 11:12 AM IST
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன்முறையாக, ரூ.262 கோடி என்ற அளவில் லாபம் ஈட்டி சாதனை படைத்து உள்ளது.
- 15 Feb 2025 10:55 AM IST
எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்! நாம் “கள்ளக் கூட்டணி” என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி.
- 15 Feb 2025 9:56 AM IST
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120க்கும், ஒரு கிராம் ரூ.7,890க்கும் விற்பனையாகி வருகிறது.








