இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Feb 2025 10:40 AM IST
தப்பி ஓடிய கைதி சிக்கினார் - 4 காவலர்கள் சஸ்பெண்ட்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்.
4 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்- வேலூர் எஸ்.பி., மதிவாணன் உத்தரவு..
- 18 Feb 2025 10:22 AM IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் சரிந்து ரூ.86.96 ஆக உள்ளது.
- 18 Feb 2025 10:19 AM IST
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு 201.44 புள்ளிகள் சரிந்து 75,795.42 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 82.65 புள்ளிகள் சரிந்து 22,876.85 புள்ளிகளாக இருந்தது.
- 18 Feb 2025 10:06 AM IST
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.63,760-க்கும் ஒரு கிராம் ரூ.7,970-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 18 Feb 2025 10:05 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக தலைநகர் வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபராக பொறுப்பேற்றது முதல் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கியதை கண்டித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோஷம் எழுப்பினர். பதாகைகள் ஏந்தியும் தங்களின் எதிர்ப்பை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்தனர்.
- 18 Feb 2025 9:58 AM IST
நிதி விவகாரத்தில் மத்திய அரசிடம் மண்டியிட மாட்டோம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆவேசத்துடன் கூறியுள்ளார். மத்திய அரசிடம் பிச்சை கேட்கவில்லை. உரிமையை தான் கேட்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
- 18 Feb 2025 9:55 AM IST
போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மார்ச் 5-ந்தேதி சாம்பல் புதன் வரை அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.
- 18 Feb 2025 9:29 AM IST
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இந்தியா உருவாவதில் வெற்றி காணும். 2029-ம் ஆண்டிற்குள் இந்தியா உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாகவும் உருவெடுக்கும் என அரியானா முதல்-மந்திரி நயப் சிங் சைனி கூறியுள்ளார்.
- 18 Feb 2025 9:23 AM IST
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.






