இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 March 2025 1:45 PM IST
சட்டப்பேரவைக்கு வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
கூட்டணி என்பது தேர்தல் வரும்போது அமைப்போம். எங்களது கொள்கை நிரந்தரமானது. எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். எங்கள் மீது கரிசனம் வேண்டாம். அ.தி.மு.க. எப்போதும் தன்மானத்தை இழக்காது’ என்றார்.
- 21 March 2025 1:05 PM IST
பா.ஜ.க. சார்பில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 21 March 2025 12:08 PM IST
கடலூரில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம்: மா.கம்யூ.மாநில செயலாளர் சண்முகம் கைது
- 21 March 2025 10:46 AM IST
தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்
தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
- 21 March 2025 9:13 AM IST
நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும், நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்






