இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Nov 2025 4:59 PM IST
அதிமுகவுக்கு பின்னடைவாக இருக்கும் - திருமாவளவன்
செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்கு பின்னணியில் பாஜக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியதாக செங்கோட்டையன் ஏற்கெனவே ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவுக்கு பின்னடைவாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- 26 Nov 2025 4:57 PM IST
விஜயை சந்தித்த செங்கோட்டையன்
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை தந்துள்ளதாகவும் காலையில் எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்த நிலையில் விஜய் உடன் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 26 Nov 2025 3:04 PM IST
உளுந்தூர்பேட்டை அருகே 50 ஆண்டுகளாக பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த 26 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பட்டா வழங்க வேண்டும் என 26 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
- 26 Nov 2025 2:39 PM IST
பழனிசாமி செய்தது எல்லாம் துரோகம் தான்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஈரோடுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? அவர் (எடப்பாடி பழனிசாமி) ஒரு துரோகி. இப்பவும் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறார் என சொல்லலாமே தவிர, விவசாயி என சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 26 Nov 2025 1:59 PM IST
டெஸ்ட்போட்டி: தொடரும் டெம்பா பவுமாவின் சாதனை
25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி வென்றது. இதன்படி தென் ஆப்பிரிக்கா கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியே சந்தித்ததில்லை என்ற டெம்பா பவுமாவின் சாதனை தொடர்கிறது.
முன்னதாக 2000ம் ஆண்டு ஹான்ஸி குரொன்யே தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி தொடர் வெற்றி பெற்றிருந்தது
- 26 Nov 2025 1:55 PM IST
சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா: ரிஷப் பண்ட் கூறிய காரணம் இது தான்...
இறுதியில் இந்திய அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் ஹார்மர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, இந்த வெற்றியால் தொடரை 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.
- 26 Nov 2025 1:45 PM IST
ஈரோடு மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
டிசம்பர் 10-ந்தேதிக்குள் ஈரோட்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும். ஈரோடு மண்டலத்தில் 400 திருக்கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1,000 வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோடிசெட்டிப்பாளையம் நகராட்சிக்கு ரூ.4.50 கோடியில் அலுவலக கட்டிடங்கள் கட்டித்தரப்படும். புஞ்சை புளியம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும். சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சட்ட சிக்கல்களை தீர்க்க வல்லுநர் குழு அமைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 90 கிராம விவசாயிகளின் திட்ட அனுமதி பட்டாக்கள் நிரந்தர பட்டாக்களாக மாற்றப்படும். தோணிமடுவுவில் புதிய தடுப்பணை கட்டப்படும். பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
- 26 Nov 2025 1:25 PM IST
2வது டெஸ்டில் படுதோல்வி...இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா
இன்று 5வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
- 26 Nov 2025 1:23 PM IST
கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? - அன்புமணி கண்டனம்
குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் திமுக ஆட்சியாளர்களின் கொள்கை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 26 Nov 2025 12:45 PM IST
தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சியா..?: செங்கோட்டையனுடன் சேகர்பாபு சந்திப்பு
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.



















