இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 March 2025 11:24 AM IST
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றடைந்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
- 27 March 2025 11:24 AM IST
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க முடியாது. கோவிலாக கருதும் அதிமுக அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கியவர் ஓபிஎஸ். தமிழக பிரச்சினை தொடர்பாக அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்தேன் என்று தூத்துக்குடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 27 March 2025 11:18 AM IST
கோடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி முன் ஆஜரானார். கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக வழக்கறிஞர்களுடன் சுதாகரன் ஆஜரானார்.
- 27 March 2025 11:06 AM IST
வீர தீர சூரன் திரைப்பட விவகாரம் ரூ.7 கோடியை உடனடியாக டெபாசிட் செய்ய டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யவும் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஓடிடி உரிமம் விற்கப்படும்முன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை எதிர்த்து பி4யு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
- 27 March 2025 10:55 AM IST
சென்னை மண்டல வானிலை மைய அறிக்கையில் 3-வது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.
- 27 March 2025 10:45 AM IST
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- 27 March 2025 10:40 AM IST
வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானத்தை முன் மொழிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ப் திருத்த சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது. வக்ப் வாரிய சட்டத்திருத்தம் சிறுபான்மையின இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 27 March 2025 10:19 AM IST
100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் நான்காயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
- 27 March 2025 9:34 AM IST
நாமக்கல் அருகே, புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த வேண்டாம் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.