இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025
x
தினத்தந்தி 27 Sept 2025 10:37 AM IST (Updated: 28 Sept 2025 9:12 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 27 Sept 2025 7:45 PM IST

    டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

    வெஸ்ட் இண்டீஸ் நேபாளம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடக்கிறது.

    இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

  • 27 Sept 2025 6:53 PM IST

    பீகாருக்கு இந்த ஆண்டு 4 தீபாவளிகள்: அமித்ஷா பேச்சு

    பாஜக தொண்டர்களை பொறுத்தவரை, ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்கான தேர்தல் இது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். பீகார் எனும் புனித பூமியில் இருந்து இந்த ஊடுருவல்காரர்களை விரட்டும் பணியை பாஜக செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

  • 27 Sept 2025 6:32 PM IST

    காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல்

    காஷ்மீர் மண்டலத்தில் ஆரு பள்ளத்தாக்கு. ராப்டிங் பாயிண்ட் யான்னர், ஆக்கத் பார்க், பாஷாஹி பூங்கா. கமன் போஸ்ட் உள்பட 7 சுற்றுலா தலங்களும் மற்றும் ஜம்மு மண்டலத்தில், தகன் டாப். ராம்பன் உள்பட 5 இடங்களும், கத்துவா பகுதிக்கு உட்பட்ட தக்கார், சலால் பகுதியில் உள்ள சிவ குகை, ரியாசி பகுதியிலும் வருகிற திங்கட்கிழமை (29-ந்தேதி) முதல் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீரின் லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.

  • 27 Sept 2025 4:22 PM IST

    லடாக்: லே பகுதியில் ஊரடங்கு தளர்வு; கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

    லடாக் டி.ஜி.பி.யான எஸ்.டி. சிங் ஜம்வால் கூறும்போது, ஊரடங்கில் பகுதி வாரியாக தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பழைய நகரில், மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் மற்றும் புதிய பகுதியில், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு
    27 Sept 2025 3:05 PM IST

    அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு

    அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயுப் படுகை இருப்பதாக ஆயில் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, அப்பகுதியில் ஹைட்ரோகார்பன் வளம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், அதன் அளவு மற்றும் வணிக ரீதியான பயன்பாடு குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

  • பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
    27 Sept 2025 2:26 PM IST

    பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

    மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சளி, காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் நலம்பெற்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.

  • தேர்தல் செயல்பாடு பற்றி ஆலோசனை - செல்வப்பெருந்தகை
    27 Sept 2025 2:14 PM IST

    தேர்தல் செயல்பாடு பற்றி ஆலோசனை - செல்வப்பெருந்தகை

    தேர்தல் செயல்பாடுகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டோம். திமுக- காங்கிரஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸ் எம்பிக்கள் தொகுதியில் திட்டங்களை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

  • ஒடிசாவில் பி.எஸ்.என்.எல் 4G சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்
    27 Sept 2025 2:10 PM IST

    ஒடிசாவில் பி.எஸ்.என்.எல் 4G சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்

    "பி.எஸ்.என்.எல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 4G-ஐ உருவாக்கியுள்ளது. சிப் முதல் ஷிப் வரை இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்.காங்கிரஸின் கொள்ளையில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • விஜய் வருகையில் எங்களுக்கு பாதிப்பில்லை - திருமாவளவன்
    27 Sept 2025 2:07 PM IST

    விஜய் வருகையில் எங்களுக்கு பாதிப்பில்லை - திருமாவளவன்

    விஜய் வருகையால் விசிக பாதிப்பு என தவறான தகவல் பரப்புகின்றனர். விசிக கொள்கை சார்ந்து இயங்குகிறது பேரறிஞர் அண்ணாவை சீமான் விமர்சிக்கிறார். திராவிட கொள்கையை ஏற்றவர்கள் அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

  • சாதி ஒரு பிரச்சினை கிடையாது  - அன்புமணி
    27 Sept 2025 2:05 PM IST

    சாதி ஒரு பிரச்சினை கிடையாது - அன்புமணி

    சாதி ஒரு பிரச்சினை கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும். சாதி பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூகநீதி என பெயர் மாற்றிக் கொள்ளுங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என நிகழ்ச்சி நடத்தி மக்களின் பணத்தை வீணடிக்கிறார்கள் என அன்புமணி கூறினார்.

1 More update

Next Story