இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 March 2025 9:55 AM IST
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வீடு புகுந்து 17 வயது சிறுமி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் கடந்த 23-ந்தேதி சம்பவம் நடந்த நிலையில், தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இந்த வழக்கில், விசாரணை மேற்கொண்ட காவல் துறை, முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பரை கைது செய்து உள்ளது.
- 29 March 2025 9:51 AM IST
டெல்லியில் பா.ஜ.க. சார்பில் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு இன்று புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றவர் தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலு நாச்சியார்.
வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் அவரைப்பற்றிய சித்திர புத்தக வெளியீடும், நாடக நிகழ்ச்சியும் நடைபெறும்.
- 29 March 2025 9:50 AM IST
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, குஜராத் டைட்டன்ஸ் இன்று எதிர்கொள்கிறது.







