இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Sept 2025 9:46 AM IST
மனம் திறக்கும் செங்கோட்டையன்..
இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்திக்கும் செங்கோட்டையன், கோபி அதிமுக அலுவலகத்தை நோக்கி வந்த தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு கருதி அதிமுக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 5 Sept 2025 9:39 AM IST
செங்கோட்டையன் பேச்சுக்காக காத்திருக்கிறேன் - ஓ பன்னீர்செல்வம்
கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன்; அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே, மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார் அவரது செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, அவரின் கருத்துக்களை அறிந்து பத்திரிகையாளரை சந்திக்கிறேன். செங்கோட்டையன் பேச்சுக்காக காத்திருக்கிறேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
- 5 Sept 2025 9:27 AM IST
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். - 5 Sept 2025 9:25 AM IST
பிசிசிஐயின் தலைவராகும் சச்சின்?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, இதுகுறித்து சச்சினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. - 5 Sept 2025 9:23 AM IST
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 5 Sept 2025 9:22 AM IST
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், டெல்லி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
- 5 Sept 2025 9:21 AM IST
டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன்- அண்ணாமலை
டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, டிடிவி தினகரன் எந்த டிமாண்டும் இல்லாமல் கூட்டணிக்கு வந்தவர், தொலைபேசி மூலமாக டிடிவி தினகரனிடம் பேசியுள்ளேன் என்று தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- 5 Sept 2025 9:21 AM IST
“பெரியாருக்கு பிடித்த சொல், சுயமரியாதை” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தந்தை பெரியாருக்கு பிடித்த சொல், சுயமரியாதை; எந்த அகராதியிலும் இதைவிட சிறந்த சொல்லை காட்ட முடியாதென்று சொல்வார். உலகிலேயே உயிரை கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதைதான் என்பார் பெரியார் என்று லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தபின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- 5 Sept 2025 9:20 AM IST
லாட்டரிக்கு உடந்தை - 6 காவலர்கள் சஸ்பெண்ட்
கடலூரில் லாட்டரி சீட்டு வியாபாரியிடம் பணம் பெற்று கொண்டு விற்பனை செய்ய அனுமதித்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- 5 Sept 2025 9:20 AM IST
தருமபுரி: அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு
மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி ஊராட்சிகளை இணைத்து அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
















