இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 March 2025 10:12 AM IST
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
- 1 March 2025 9:27 AM IST
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520 ஆக விற்பனயாகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து , ரூ.7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 1 March 2025 9:12 AM IST
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து கடிதத்தில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை கொண்டாடுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் தலைமையில் மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்ததுகிறேன். பூரண உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
- 1 March 2025 8:58 AM IST
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.







