ஆசிய உலகத்திறன் தைபே 2025 போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

ஆசிய உலகத்திறன் தைபே 2025 போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
2025 நவம்பர் 27 முதல் 29 வரை தைவானின் தைபே நகரில் உள்ள நாங்காங் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற ஆசிய உலகத்திறன் தைபே 2025-ல் 29 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆசிய உலகத்திறன் தைபே 2025 திறன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போட்டியாளர்கள் உள்பட இந்தியா முழுவதும் இருந்து 23 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா 1 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் 3 Medal of Excellence என மொத்தம் 6 பதக்கங்களை வென்று 8 வது இடத்தைப் பிடித்தது. தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. இரா.தினேஷ் Robot System Integration திறன் பிரிவில் வென்ற வெண்கலப் பதக்கம் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூ.ர.முகமது மபாஸ் Software Application Development பிரிவில் வென்ற Medal for Excellence ஆகிய 2 பதங்கங்களும் இந்தியா வென்ற 6 பதக்கங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
இப்போட்டியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் Plastering & Dry Wall Systems திறன் பிரிவில் பங்கேற்று இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் 2024- இந்திய திறன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவராவார். இரா.தினேஷ் இந்திய திறன் போட்டி 2021-ல் வெண்கலப்பதக்கம் மற்றும் 2024-ல் வெள்ளிப்பதக்கமும் வென்றவர். பூ.ர.முகமது மபாஸ் இந்திய திறன் போட்டியில் 2024-ல் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசிய உலகத்திறன் தைபே 2025 (WorldSkills Asia Taipei 2025) போட்டியில் – Robot System Integration திறன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா.தினேஷ் இராமசாமிக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், Software Application Development திறன் பிரிவில் Medal for Excellence வென்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூ.ர.முகமது மபாஸ்க்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், Plastering & Dry Wall Systems திறன் பிரிவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றதற்காக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ம.சுரேந்திரனுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.






