முதல் தர கிரிக்கெட்: 232 ஆண்டு கால சாதனை முறியடிப்பு


முதல் தர கிரிக்கெட்:  232 ஆண்டு கால சாதனை முறியடிப்பு
x

உள்ளூர் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

கராச்சி,

பிரசிடென்சி கோப்பைக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் கராச்சியில் கடந்த 15-ந் தேதி தொடங்கிய ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் டி.வி.- சுய் நார்தர்ன் கியாஸ் பைப்லைன்ஸ் நிறுவன அணிகள் மோதின.

இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் டி.வி. அணி 166 ரன்னும், சுய் நார்தர்ன் அணி 238 ரன்னும் எடுத்தன. 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் டி.வி. அணி 111 ரன்னில் ஆட்டமிழந்தது . இதனையடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய சுய் நார்தர்ன் அணி விளையாடியது.

பாகிஸ்தான் டி.வி. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுய் நார்தர்ன் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் சுய் நார்தர்ன் 37 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் டி.வி. அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பாகிஸ்தான் டி.வி. அணி படைத்தது. இதற்கு முன்பு 1794-ம் ஆண்டு லண்டனில் நடந்த மெரில்போன் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓல்டுபீல்டு அணி 41 ரன்களை இலக்காக நிர்ணயித்து 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

1 More update

Next Story