முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி 300 ரன்கள் குவிப்பு


முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி 300 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2026 5:25 PM IST (Updated: 11 Jan 2026 6:54 PM IST)
t-max-icont-min-icon

டேரில் மிட்சேல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.

வதோதரா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.இதில், டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்தது.தொடக்க விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில் நிக்கோலஸ் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து கான்வே 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வில் யங் 12 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து டேரில் மிட்சேல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 300 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ராணா, சிராஜ் ம, வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.தொடர்ந்து 301 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

1 More update

Next Story