காவல் துணை ஆணையராக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனை


காவல் துணை ஆணையராக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனை
x

மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு 34 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

புதுடெல்லி ,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரிச்சா கோஷ் இடம் பிடித்திருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார்.

உலக கோப்பையில் 8 இன்னிங்சில் 235 ரன்கள் அடித்தார். இதனால் மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு 34 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் தங்க பேட், தங்க பந்து ஆகியவையும் வழங்கப்பட்டது. அத்துடன் காவல்துறையில் டி.எஸ்.பி. அந்தஸ்தில் பணி வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி பகுதியின் காவல் துணை ஆணையராக ரிச்சா கோஷ் இன்று பொறுப்பேற்றார்.

1 More update

Next Story