விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
துபாய்,
10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது. ஜியோ சினிமா செயலியிலும் ஏல நிகழ்ச்சியை காணலாம்.
Live Updates
- 24 Nov 2024 10:20 PM IST
விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
- 24 Nov 2024 10:11 PM IST
சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் ப்ராரை ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்
- 24 Nov 2024 10:10 PM IST
இளம் வீரர் நமன் தீர்-ஐ ரூ. 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் கேட்ட நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அதே விலைக்கு பெற்றுக்கொண்டது மும்பை
- 24 Nov 2024 10:07 PM IST
இந்திய வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி -ஐ ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
- 24 Nov 2024 10:00 PM IST
கடந்த சீசனில் சிஎஸ்கே அணியால் ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர் ரிஸ்வியை,ரூ.95 லட்சத்திற்கு வாங்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ்
- 24 Nov 2024 9:59 PM IST
இந்திய வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி -ஐ ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 24 Nov 2024 9:49 PM IST
ரூ.30 லட்சம் அடிப்படை விலை கொண்ட இளம் வீரர் நேஹல் வதேராவை ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் . கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வந்தார்






