தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்திய அணியில் 3 மாற்றங்கள்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்திய அணியில் 3 மாற்றங்கள்
x

image courtesy:PTI

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆமதாபாத்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் காயத்தால் அவதிப்படும் சுப்மன் கில் ஆகியோருக்கு பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் ஒரே மாற்றமாக நோர்ட்ஜே நீக்கப்பட்டு ஜார்ஜ் லிண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் பெரீரா, ஜார்ஜ் லிண்டே, மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், லுங்கி நிகிடி, ஒட்னீல் பார்ட்மேன்

1 More update

Next Story