நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க அணி நிர்வாகம் விருப்பம்: ஹர்ஷித் ராணா


நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க  அணி நிர்வாகம் விருப்பம்: ஹர்ஷித் ராணா
x

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மும்பை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 29 ரன்கள் விளாசி (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்ஷித் ராணா கூறியதாவது,

நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனது கடமையாகும். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். இது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்ய களம் கண்ட போது, லோகேஷ் ராகுல் மிகவும் உதவிகரமாக இருந்தார். அதனால் நன்றாக கவனம் செலுத்தி ரன்கள் திரட்டினேன். தேவைப்படும் போதெல்லாம் அணியின் பின்வரிசையில் என்னால் 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். என்னால் இதை செய்ய முடியும் என்று அணியும் நம்புகிறது. என தெரிவித்தார்.

1 More update

Next Story