அதிரடியில் மிரட்டல்....15 பந்துகளில் அரைசதம் கடந்த சர்பராஸ் கான்


அதிரடியில் மிரட்டல்....15 பந்துகளில் அரைசதம் கடந்த  சர்பராஸ் கான்
x

முதல் தர கிரிக்கெட்டில் அதிக வேக அரைசதம் அடித்து சர்பராஸ் கான் சாதனை படைத்துள்ளார்.

மும்பை,

33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 45.1 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரமன்தீப் சிங் 72 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து 217 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணியில் சர்பராஸ் கான் அதிரடியாகி விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 15 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் முதல் தர கிரிக்கெட்டில் அதிக வேக அரைசதம் அடித்து சர்பராஸ் கான் சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து விளையாடிய சர்பராஸ் கான் 62 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். மும்பை எளிதாக வெற்றி பெறும் என நினைத்த நிலையில் மும்பை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 1 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

1 More update

Next Story