விஜய் ஹசாரே கோப்பை: புதிய சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்


விஜய் ஹசாரே கோப்பை: புதிய  சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்
x

அடுத்த இடங்களில் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.

மும்பை,

33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மராட்டியம் - கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.தொடர்ந்து 250 ரன்கள் இலக்குடன் விளையாடிய மராட்டிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்த்தியாசத்தில் மராட்டிய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 6 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற வரலாறு படைத்தார் ருதுராஜ். ருதுராஜ் மொத்தமாக 112 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அடுத்த இடங்களில் 108 சிக்ஸர்களுடன் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.

1 More update

Next Story