மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய டாப்-5 வீராங்கனைகள் யார்-யார்..?


மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய டாப்-5 வீராங்கனைகள் யார்-யார்..?
x

image courtesy:ICC

13-வது மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வந்த 13-வது மகளிர் உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் இந்த தொடரில் அதிக ரன் மற்றும் விக்கெட் வீழ்த்திய டாப் -5 வீராங்கனைகள் குறித்து இங்கு காணலாம்..!

அதிக ரன் குவித்த டாப்-5 வீராங்கனைகள்:-

1. லாரா வோல்வார்ட் - 571 ரன்கள்

2. ஸ்மிருதி மந்தனா - 434 ரன்கள்

3. ஆஷ்லே கார்ட்னர் - 328 ரன்கள்

4. பிரதிகா ராவல் - 308 ரன்கள்

5. போப் லிட்ச்பீல்ட் - 304 ரன்கள்

அதிக விக்கெட் வீழ்த்திய டாப்-5 வீராங்கனைகள்

1. தீப்தி சர்மா - 22 விக்கெட்டுகள்

2. அன்னாபெல் சதர்லேண்ட் - 17 விக்கெட்டுகள்

3. சோபி எக்லெஸ்டோன் - 16 விக்கெட்டுகள்

4. ஸ்ரீ சரணி - 14 விக்கெட்டுகள்

5. அலனா கிங் / நோன்குலுலேகோ மிலாபா - 13 விக்கெட்டுகள்

1 More update

Next Story