ஆஸ்திரேலிய ஓபன்: வெற்றிக்காக போராட செய்து விட்டார் விக்டோரியா; காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா பேட்டி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரைனா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 8-ம் நாளான இன்று மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தின சுற்று போட்டி ஒன்று நடந்தது.
இதில், உலக தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள அரைனா சபலென்கா, உலக தர வரிசையில் 17-வது இடத்தில் உள்ள விக்டோரியா போகோ (வயது 19) என்பவரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 6-1, 7-6(1) என்ற நேர் செட் கணக்கில் விக்டோரியாவை வீழ்த்தி சபலென்கா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
2 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றவரான சபலென்கா போட்டி முடிந்தபின்னர் கூறும்போது, இந்த இளம் வயதில் மிளிரும் வகையில் விக்டோரியா விளையாடினார். வெற்றி கிடைக்க நான் கடுமையாக போராடும்படி செய்து விட்டார். இந்த வெற்றியால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது முழு அளவில் போராட கூடிய வகையில் இருந்தது என கூறினார்.






