ஆண்கள் வயிற்றில் பரவும் கொழுப்பு படலம்


ஆண்கள் வயிற்றில் பரவும் கொழுப்பு படலம்
x
தினத்தந்தி 20 July 2023 10:00 PM IST (Updated: 20 July 2023 10:01 PM IST)
t-max-icont-min-icon

ஆண்களுக்குத் தொப்புள் பகுதியில் கொழுப்பு சேருவது ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களுக்குப் பின்பக்கத்திலும் தொடையிலும் சேருவதால் பெரிய தீங்கேதும் ஏற்படாது.

ஆண்களுக்கு கொழுப்பு அடி வயிறு, சிறுகுடல் பகுதியிலும் திரளும். கொழுப்பு தசைச் சுவர்களுக்கு உள்ளேயும் பரவி, குடல்களையும் மற்ற உறுப்புகளையும் மூடியிருக்கும். இதனால் அறுவைச் சிகிச்சை செய்ய நேரும். வயிற்றைத் திறந்து பார்க்கிறபோது எல்லா உள் உறுப்புகளையும் மஞ்சள் நிறத்தில் கொழுப்புப் படலம் பாளம் பாளமாக மூடியிருக்கும்.

குடல் வாலையோ, பிற பகுதிகளையோ தொட்டுப் பார்க்க முடியாமல் இடைஞ்சல் செய்யும். அதை அறுப்பதும் கடினம், தைப்பதும் கடினம்.

பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பின்பக்கங்களும் தொடைகளும் இளைக்காது. அவ்விடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை.

தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும். சிசுக்களின் பாதுகாப்புக்காக இயற்கை, இம்மாதிரி ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது. ஊட்ட பற்றாக்குறை காரணமாக தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால் பின்பக்கங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கிறது. எனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை என்றும், ஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.


Next Story