மனதை உற்சாகப்படுத்தும் சிரிப்பு


மனதை உற்சாகப்படுத்தும் சிரிப்பு
x

மனம் விட்டு சிரிக்கின்ற பழக்கம் டாக்டருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை குறைப்பதோடு, உங்களுடைய வாழ்நாளையும் நீடிக்க செய்கிறது.

சிரிப்பு மனதை உற்சாகப்படுத்துகிறது. கலகலப்பாக வாழ்வை நடத்த வழி காட்டுகிறது. மனம் விட்டு சிரிக்கின்ற பழக்கம் டாக்டருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை குறைப்பதோடு, உங்களுடைய வாழ்நாளையும் நீடிக்க செய்கிறது. மகிழ்ச்சியான முகத்துடன் இருப்பது, வெற்றி பெறுவதற்கு மிகச்சிறந்த உபயமாகிறது. மகிழ்ச்சியான கட்டத்தில், அதிகம் பேர் இருப்பதை பார்த்திருப்பீர்கள். காரணம், மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியை பரப்ப முடியும். மகிழ்ச்சி என்பது மனநிலை. அது, உங்களிடமே இருக்கின்றது. வேறு எங்கும் தேடி, பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. போராட வேண்டியதில்லை. உங்களுடன் பிறந்தது அது. "வயது செல்ல செல்ல, தோல் சுருங்கிவிடும். அதுபோல் மகிழ்ச்சி குறையக்குறைய வாழ்க்கையும் சுருங்கிவிடும்.


Next Story