'துணிவு' படத்தின் அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர் - அஜித் ரசிகர்கள் உற்சாகம்


துணிவு படத்தின் அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர் - அஜித் ரசிகர்கள் உற்சாகம்
x

"துணிவு படத்தின் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை மஞ்சுவாரியர் 'துணிவு' திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "துணிவு படத்தின் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


1 More update

Related Tags :
Next Story