அனுஷ்கா ஷர்மாவுடன் அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடும் விராட் கோலி
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுடன் அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியை முடித்த பின்னர் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. பின்னர் வீரர்கள் அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் தங்கியுள்ள விராட் கோலி, நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் பொழுதை கழித்து வருகிறார். நடிகை அனுஷ்கா அங்கு நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று உள்ளார். இந்த விழா மிட்லைப் அரங்கத்தில் வருகிற ஜூலை 14- 15 ந்தேதி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story