வி.இசட்.துரை டைரக்ஷனில் சுந்தர் சி. நடிக்கும் ‘இருட்டு’
சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு, ‘இருட்டு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
‘முறை மாமன்’ படத்தில் டைரக்டராக அறிமுகமான சுந்தர் சி, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், மேட்டுக்குடி, வின்னர், அரண்மனை உள்பட 15–க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். தலைநகரம், வீராப்பு, சண்ட, அரண்மனை உள்பட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். இவர், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்துக்கு, ‘இருட்டு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் தன்சிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். இது, ஒரு
பயங்கரமான திகில் படம். திகிலும், திருப்பங்களும் கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அரண்மனை, அரண்மனை–2 ஆகிய படங்களை அடுத்து சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கும் படம், இது. இதில், அவர் போலீஸ் வேடம் ஏற்றுள்ளார். அவருடன் நடிக்கும் கதாநாயகி மற்றும் நடிகர்–நடிகைகள் முடிவாகவில்லை. முகவரி, நேபாளி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கிய வி.இசட்.துரை, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறும்போது, ‘‘இது, பேயே இல்லாத திகில் படம். பெரும்
பகுதி படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து ஐதராபாத், சூரத் ஆகிய இடங்களில் படம் வளர இருக்கிறது’’ என்றார்.
Related Tags :
Next Story