வரி ஏய்ப்பு புகாரில், 670 கோடி ரூபாய் அபராதம் மாயமான நடிகை
சீனாவின் பிரபல நடிகை ஃபேன் பிங்பிங்-க்கு வரி ஏய்ப்பு புகாரில், 670 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் எக்ஸ் மேன் - டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட் (X men Days of Future past) படத்தில் நடித்தவர் ஃபேன் பிங்பிங். இவர் கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை எங்குள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில், பிங்பிங் மற்றும் அவர் தொடர்புடைய நிறுவனங்கள் 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை ஜியாங்ஸூ மாகாண வருமான வரி பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
எனவே அவர் 670 கோடி ரூபாய் அபராதத் தொகையை சேர்த்து 942 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story