பிறந்த நாள் கொண்டாடிய சிம்புவை நேரில் வாழ்த்திய தனுஷ்


பிறந்த நாள் கொண்டாடிய சிம்புவை நேரில் வாழ்த்திய தனுஷ்
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 4 Feb 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்-சிம்பு இடையே மோதல் என்று வலைத்தளங்களில் அடிக்கடி தகவல் பரவுவது உண்டு.

இருவரின் படங்களிலும் இடம்பெறும் பாடல்கள் மற்றும் வசனங்களை இணைத்தும் இந்த மோதலை சிலர் ஊர்ஜிதப்படுத்தி வந்தனர். இதனால் இருவரின் ரசிகர்களுக்கும் பகை வளர்ந்து சமூக வலைத்தளத்தில் சண்டையிடும் சம்பவங்களும் நடந்தன.

ஆனால் நிஜத்தில் இருவரும் விரோதம் இல்லாமல் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவரவர் படங்கள் ரிலீசாகும்போது வாழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அடிக்கடி போனில் பேசியும் நலம் விசாரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் நெருக்கத்தை உறுதிப்படுத்துவதுபோல் சிம்புவின் பிறந்தநாள் சென்னையில் நடந்துள்ளது.

இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். சிம்பு ‘கேக்’ வெட்டும்போது அருகில் நின்று கைதட்டி தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். தனுசுக்கு சிம்பு கேக்கும் ஊட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இருவரின் ரசிகர்களாலும் வைரலாக்கப்பட்டு வருகிறது. ஜெயம்ரவி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

சிம்புவுக்கு நடிகர் சந்தானம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரசிகர்களும் வாழ்த்தினர்.

Next Story