இணையதளத்தில் வைரலாகும் அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்


இணையதளத்தில் வைரலாகும் அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
x
தினத்தந்தி 5 March 2019 6:24 AM IST (Updated: 5 March 2019 6:24 AM IST)
t-max-icont-min-icon

அஜித் நடிப்பில் வெளிவர உள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.

இந்த படத்தில், அஜித்துடன் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு “நேர்கொண்ட பார்வை” என்று படக்குழுவினர் டைட்டில் வைத்துள்ளனர். இதற்கு முன்னதாக இயக்குனர் வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story