மது, கஞ்சா, ஆபாச காட்சிகள்: நடிகை ஓவியா மீது மேலும் ஒரு புகார்


மது, கஞ்சா, ஆபாச காட்சிகள்: நடிகை ஓவியா மீது மேலும் ஒரு புகார்
x
தினத்தந்தி 6 March 2019 4:45 AM IST (Updated: 6 March 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

மது, கஞ்சா, ஆபாச காட்சிகளில் நடித்தது தொடர்பாக, நடிகை ஓவியா மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பிரபல கதாநாயகர்கள் நடித்துள்ள படங்களே இதுவரை மது, சிகரெட், ஆபாச காட்சிகளுடன் வந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. முதல் தடவையாக நடிகைகள் மது அருந்துதல், கஞ்சா அடித்தல், ஆபாசமாக இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல் என்ற ரீதியில் 90 எம்.எல் படம் வெளியாகி எதிர்ப்பில் சிக்கி உள்ளது. ஓவியாவே இதுபோன்ற அநாகரிகமான காட்சிகளில் படத்தில் நடித்து இருப்பதாக கண்டனம் எழுந்துள்ளன.

ஓவியா மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் ஆபாசமாக நடித்துள்ள ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்றும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் தமிழர் கலாசார பேரவை சார்பில் அதன் மாநில சட்ட ஆலோசகர் பன்னீர்செல்வம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓவியா மீது மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், “ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படத்தில் பாலுணர்வை தூண்டும் ஆபாச காட்சிகள் உள்ளன. இது தமிழ் பண்பாடு கலாசாரத்துக்கு அவமரியாதை ஏற்படுத்துவதுபோல் உள்ளது.

எனவே ஓவியா மீதும் தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story