உடலில் நெருப்பு பற்ற வைத்த அக்‌ஷய்குமாரை பார்த்து மனைவி அதிர்ச்சி


உடலில் நெருப்பு பற்ற வைத்த அக்‌ஷய்குமாரை பார்த்து மனைவி அதிர்ச்சி
x
தினத்தந்தி 6 March 2019 11:13 AM IST (Updated: 7 March 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

உடலில் நெருப்பு பற்ற வைத்த நடிகர் அக்‌ஷய்குமாரை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இணையதளங்களில் வெளியாகும் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் இணையதள தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அக்‌ஷய்குமாரும் ‘தி எண்ட்’ என்ற வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். அவர் இணைய தள படத்தில் நடிக்க வந்தது இந்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த படத்தின் தொடக்க விழா மும்பையில் நடந்தது. விழா மேடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்‌ஷய்குமார் தனது உடலில் நெருப்பை பற்றவைத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

இந்த காட்சி வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களும் அதிர்ந்தனர். இந்த புகைப்படங்களை அக்‌ஷய்குமார் அவரது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். உடலில் நெருப்பை பற்ற வைப்பது குறித்து அக்‌ஷய்குமார் தனது மனைவியும், நடிகையுமான டுவிங்கிள் கன்னாவிடமும் தெரிவிக்கவில்லை. இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும் பார்த்து அவரும் அதிர்ச்சியானார்.

இதுகுறித்து டுவிங்கிள் கன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் திடீரென்று உடம்பில் தீ வைத்துக்கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு வாருங்கள் உங்களை கொன்று விடுகிறேன்” என்று செல்லமாக மிரட்டி உள்ளார். அவரது மிரட்டலும் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Next Story