சூர்யா நடிப்பில் 4 படங்கள்
சூர்யா நடிப்பில் 4 புதிய படங்கள் உருவாகி வருகின்றன.
சூர்யா நடித்து கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் திரைக்கு வந்தது. செல்வராகவன் இயக்கத்தில் நடித்த என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டும் இன்னும் திரைக்கு வரவில்லை. கடந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து பட வேலைகள் தாமதமானதால் தள்ளிவைத்தனர்.
தற்போது மீண்டும் படப்பிடிப்பை நடத்தி பாக்கி இருந்த வேலைகளை முடித்துள்ளனர். ஓரிரு மாதங்களில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வந்தன.
இந்த படத்தை முடித்து விட்டு இறுதிச்சுற்று படம் மூலம் பிரபலமான சுதா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த வருடம் இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை சிவா இயக்கி உள்ளார்.
Related Tags :
Next Story