தமிழில் வெளியாகிறது : விஜய் தேவரகொண்டாவின் புதிய படம், ‘அர்ஜுன் ரெட்டி’
தெலுங்கில் தயாரான பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகின்றன.
விஜய் தேவரகொண்டா, பூஜா ஜாவேரி, பிரகாஷ்ராஜ், பிரபாகர், முரளி, சர்மா, சுரேகா வாணி பிரிதிவிராஜ் ஆகியோர் நடித்து தெலுங்கில் வெளியான ‘துவாரகா’ படமும் தமிழில் வருகிறது. ‘துவாரகா’ படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி, வசூல் குவித்தது.
இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது. தமிழில் வெளியாகும் இந்த படத்துக்கு, ‘அர்ஜுன் ரெட்டி’ என்று பெயர் சூட்டி யிருக்கிறார்கள். இதே பெயரில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து திரைக்கு வந்த படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அந்த படம் அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் கொடுத்தது.
அதே பெயரில் ‘துவாரகா’ படம் தமிழில் வருவதால், பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்கி உள்ளார். சாய்கார்த்திக் இசையமைத்துள்ளார். நெல்லை பாரதி பாடல்களை எழுதி உள்ளார். படத்தை தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி தமிழகம் முழு வதும் வெளியிடுகிறார்.
படத்தை பற்றி அவர் கூறும்போது, “தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய பல படங்களை தமிழில் வெளியிட்டுள்ளேன். அந்த வரிசையில், ‘அர்ஜுன் ரெட்டி’ படமும் வருகிறது. திருடனாக இருக்கும் ஒரு இளைஞன், காதலினால் எப்படி மாறுகிறான்? என்பது படத்தின் கதை. காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் அனைத்தும் படத்தில் இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story