‘ஹீரோ’ தலைப்பை பயன்படுத்த கூடாது சிவகார்த்திகேயன் படத்துக்கு எதிர்ப்பு


‘ஹீரோ’ தலைப்பை பயன்படுத்த கூடாது சிவகார்த்திகேயன் படத்துக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 March 2019 3:30 AM IST (Updated: 13 March 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்புக்கு புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இரும்புத்திரை படம் மூலம் பிரபலமான மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் பூஜையை படக்குழுவினர் சென்னையில் நேற்று நடத்தினர். இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவித்தனர். இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் காக்கா முட்டை படத்துக்கு வசனம் எழுதி விருதுகள் பெற்று இருக்கிறேன். குற்றமே தண்டனை படத்தில் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை எழுதி உள்ளேன். பல நாவல்களும் எழுதி இருக்கிறேன். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். படத்துக்கு ஹீரோ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு வருடத்துக்கு முன்பே பதிவு செய்துள்ளோம். ஆனால் திடீரென்று சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவிப்பு வந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹீரோ தலைப்பு எங்களுக்கே சொந்தம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

இந்த தலைப்பை யாருக்கும் விட்டுத்தர முடியாது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story