உடற்பயிற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரகுல்பிரீத் சிங்


உடற்பயிற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரகுல்பிரீத் சிங்
x
தினத்தந்தி 2 April 2019 3:30 AM IST (Updated: 2 April 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடிக்கிறார் ரகுல்பிரீத் சிங். சினிமா வாழ்க்கை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடிக்கிறார் ரகுல்பிரீத் சிங். சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:-

கதாநாயகியாக பல மொழி படங்களில் நடித்து ஓய்வில்லாமல் இருக்கிறேன். பல நகரங்களில் ஆரோக்கிய உடற்பயிற்சி கூடம் நடத்துகிறேன். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் உடற்பயிற்சி கூடம் சம்பந்தமான தொழிலை கவனித்துக்கொள்கிறேன். நான் இருக்கும் சினிமாவில் உடற்பயிற்சி முக்கியம். உடற்பயிற்சி கூடம் நடத்துவதில் வியாபார நோக்கம் சிறிதளவு இருந்தாலும், அதன் பின்னால் உடற்பயிற்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற சமூக அக்கறையும் இருக்கிறது. எதிர்காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கும் தொழில் செய்யவும் ஆசை உள்ளது.

நான் நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை. பூலோக சுந்தரி என்ற பட்டம் அவருக்குத்தான் பொருத்தம். முதல் பெண் சூப்பர் ஸ்டார் அவர்தான். எத்தனையோ வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களையும் சம்பாதித்தார். அவரை பற்றி எவ்வளவு பேசினாலும் குறைவாகத்தான் இருக்கும்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மொழி பேதம் இல்லாமல் இந்திய சினிமா துறையில் நீண்ட காலம் நடிகையாக நீடித்தார். சமீபத்தில் பல படங்கள் சர்ச்சைகளை சந்தித்துள்ளன. ஆனால் ஸ்ரீதேவியின் படங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. தொடர் வெற்றிகள் கொடுத்தார். அகம்பாவம் இல்லாதவர். இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

Next Story