குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை


குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை
x
தினத்தந்தி 2 April 2019 10:58 AM IST (Updated: 2 April 2019 10:58 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

மும்பை

மாடல் அழகியும், நடிகையுமான ரூகி சிங், கடந்த 31ம் தேதி நள்ளிரவு ஆண் நண்பர்கள் இருவருடன் ரெஸ்டாரன்ட் சென்றிருந்தபோது, ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்த போலீஸ்காரர்கள் அவர்களை சமரசம் செய்ய முயன்றனர்.

ஆனால் குடிபோதையிலிருந்த நடிகை, போலீஸ்காரர்களின் ஆடைகளை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின் அங்கிருந்து புறப்பட்ட அவர், வாகனத்தை ஓட்டி சென்று சான்டாக்ரூஸ் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளார்.

தகவல் அறிந்து வந்த சான்டாக்ரூஸ் போலீசார் நள்ளிரவு என்பதால் அவரை கைது செய்யாமல், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு மட்டும் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்குள் நடிகை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story