சீன படத்தில் நடிக்க விரும்பும் ஷாருக்கான்!


சீன படத்தில் நடிக்க விரும்பும் ஷாருக்கான்!
x
தினத்தந்தி 3 May 2019 4:45 AM IST (Updated: 2 May 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் சீனா சென்று இருந்தார்.

ஷாருக்கானை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து சீன படத்தில் நடிக்க ஷாருக்கானுக்கு ஆசை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனக்கு சீன படம் ஒன்றில் அங்குள்ள சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. அது நிறைவேறினால் அங்குள்ள மொழியை கூட கற்று நானே ‘டப்பிங்’ பேசுவேன். யாரோ ஒருவர் எனக்கு ‘டப்பிங்’ பேசுவதை நான் விரும்ப மாட்டேன். நடிப்பது மட்டுமல்ல. வாய்ப்பு கிடைத்தால் சீன தயாரிப்பாளர்களோடு இணைந்து நானும் அந்த படத்தை தயாரிக்க தயாராக இருக்கிறேன். நான் நடிக்கும் படம் இந்திய சீனா நல்லுறவுக்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும் இருக்க வேண்டும். இரண்டு நாட்டு கலாசாரம், சம்பிரதாயங்கள் முக்கியமானவை.

இரு நாடுகள் இடையே நல்ல சூழல் ஏற்படுவதற்கு இந்த படம் மிகவும் உதவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் நடித்த ‘ஜீரோ’ படம் இந்திய ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால், சீன ரசிகர்கள் அதிக அளவு ஆதரித்தார்கள். அவர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story