வெற்றியைக் கொண்டாடும் பார்வதி


வெற்றியைக் கொண்டாடும் பார்வதி
x
தினத்தந்தி 4 May 2019 4:16 AM GMT (Updated: 2019-05-04T09:46:25+05:30)

தமிழில் ‘பூ’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி

‘மரியான்’ படத்தில் தனுசுடன் ஜோடியாக நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிக்கத் தெரிந்த நாயகிகளில் முன்னிலை பெற்றவராக இருந்தாலும், அவர் கதை தேர்வு செய்வதில் நிதானமாகவே செயல்படக் கூடியவர்.

அதனால்தான் பார்வதி நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுமே ரசிகர்களிடம் பேசப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘உயிரே’ படமும் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது.

பல்லவி என்ற கதாபாத்திரத்தில் விமானம் ஓட்டும் பெண்ணாக நடித்திருக்கும் பார்வதி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவதாக ஒரு பக்கம் முகம் சிதைந்த நிலையில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரது முகத்தோற்றமும், நடிப்பும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதனால் பார்வதியும் தன்னுடைய படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறாராம். இப்படத்தில் பார்வதிக்கு ஜோடியாக ஆசிப் அலி மற்றும் டொவினோ தாமஸ் ஆகிய இரண்டு கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.


Next Story