இளம் பெண் பாலியல் குற்றச்சாட்டு பிரபல நடிகர் கைது


இளம் பெண் பாலியல் குற்றச்சாட்டு பிரபல நடிகர் கைது
x
தினத்தந்தி 6 May 2019 5:55 PM IST (Updated: 6 May 2019 5:55 PM IST)
t-max-icont-min-icon

இளம் பெண் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

பிரபல தொலைக்காட்சி நடிகரான கரன் ஓபராய், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். 

திருமணம் செய்துகொள்வதாக கூறி கரன் ஓபராய் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதை வீடியோ எடுத்ததோடு அல்லாமல் வீடியோவை வெளியிடாமல் இருக்க தன்னிடம் பணம்  கேட்டு மிரட்டியதாகவும் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

இதையடுத்து விசாரணையை முடுக்கிய போலீசார் கரன் ஓபராயை  கைதுசெய்தனர். கரன் ஓபராயிடம் காவல்துறை தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகிறது.

Next Story