விஜய் சேதுபதியின் புதிய படம் ‘சங்கத்தமிழன்’
விஜய் சேதுபதியின் புதிய படத்துக்கு சங்கத்தமிழன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் 7 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருடம் ரஜினியுடன் வில்லனாக நடித்த பேட்ட, திருநங்கை வேடத்தில் வந்த சூப்பர் டீலக்ஸ் ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அடுத்து சிந்துபாத் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி படங்கள் கைவசம் உள்ளன. இதைத்தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமல்ஹாசன் நடித்த நம்மவர், விஜய்யின் பைரவா மற்றும் பாதாள பைரவி, மாயா பஜார், மிஸ்ஸியம்மா உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு பெயர் வைக்காமலேயே கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வந்தனர். தற்போது சங்கத்தமிழன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் தோன்றும் முறுக்கு மீசை விஜய் சேதுபதியின் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
இதில் கதாநாயகிகளாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். நாசர், சூரி உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள்.
Related Tags :
Next Story